சிவாணி ஸ்ரீ / 2019 செப்டெம்பர் 12 , பி.ப. 07:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
காவத்தை எந்தான வைத்தியசாலையில் புதிதாக இரண்டு மாடிக் கட்டடத்தொகுதியை அமைப்பதற்கு சப்ரகமுவ மாகாண சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்கென சப்ரகமுவ மாகாண சபை, 18.7 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. இந்தப் பணிக்கான ஆரம்ப நிகழ்வு, நேற்று (11) இடம்பெற்றது.
மேற்படி வைத்தியசாலைக்கு வரும் பெரும்பாலான தோட்ட தொழிலாளர்களின் நலன் கருதி சிகிச்சைப் பிரிவு, அவசர சிகிச்சைப் பரிவு என்பன அமைக்கப்பட உள்ளதுடன், இவ்வைத்தியசாலைக்குத் தேவையான வைத்தியர்கள், சேவையாளர்கள், உபகரண பொருட்களும் பெற்று கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் சப்ரகமுவ மாகாண ஆளுநர் தம்ம திசாநாயக்க, மாகாண பிரதான செயலாளர் டி.எம்.மாலணி, மாகாண சுகாதார அமைச்சின் திட்டமிடல் பிரிவு பணிப்பாளர் லலித் பம்பரபோட்டுவ, மாகாண சுகாதார பணிப்பாளர் கபில கண்ணங்கர உட்பட மாகாண சுகாதார அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
2 hours ago
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago
4 hours ago