Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
Kogilavani / 2020 ஒக்டோபர் 13 , பி.ப. 08:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிவாணிஸ்ரீ
காவத்தை வெள்ளந்துர பிரதேசத்தில், கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர் ஒருவர், இன்று (13) இனங்காணப்பட்டதையடுத்து காவத்தை பிரதேசத்தில் அச்ச நிலை ஏற்பட்டது.
காவத்தைப் பிரதேசத்தில் ஒருவர், மாலைத்தீவுக்குச் செல்வதற்காக தனியார் வைத்தியசாலை ஒன்றில் பீசிஆர் பரிசோதனை செய்ததையடுத்து, அவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக வைத்தியப் பரிசோதனையின் மூலம் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து குறித்த தொற்றாளரை பொலிஸார் மற்றும் சுகாதார அதிகாரிகள், அவரை அரசாங்க வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றனர்.
மேற்படி நபர், காவத்தை, வெள்ளந்துரை பிரதேசத்தில் உள்ள பலவேறு வியாபார நிலையங்களுக்குச் சென்றுள்ளார் என்று இதனையடுத்து காவத்தை மற்றும் வெள்ளந்துர பிரதேசங்களில், 7 க்கும் மேற்பட்ட வியாபார நிலையங்கள் மூடப்பட்டுள்ளதுடன் 50க்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து காவத்தை வெள்ளந்துர நகரப் பகுதிகளுக்கு, பொருள்களை வாங்கவதற்காகவும் மற்றும் வைத்தியசாலைக்கு நோயாளர்களை பார்வையிடுவதற்கு வந்த பொதுமக்கள் அச்சமடைந்து சென்றதையும் அவதானிக்க முடிந்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
12 May 2025
12 May 2025