2026 மே 09, சனிக்கிழமை

dd

கிணற்றில் விழுந்து ஒருவர் பலி; ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி

Editorial   / 2019 ஒக்டோபர் 18 , பி.ப. 03:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாலித ஆரியவன்ச

பதுளை- கந்தகெட்டிய தடயமத்தலாவ கிராமத்திலுள்ள 45 அடி ஆழமான கிணற்றில் தவறி விழுந்து ஒருவர் பலியாகியுள்ளதுடன், மற்றுமொருவர்  கந்தகெட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.  

இச்சம்பவத்தில், தடயமத்தலாவ பதுளுஓயா பிரதேசத்தைச் சேர்ந்த டீ.எம்.பியதாஸ (வயது 50) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மேற்படி பிரதேசத்தைச் சேர்ந்த டி.எம்.ஆரியபால (வயது 41) என்பவர், ஆபத்தான நிலையில் கந்தகெட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி இருவரும், இன்று (18) காலை கிண்றை இறைக்கச் சென்றபோதே,  கிணற்றில் தவறி விழுந்துள்ளனர் என்றும் தெரியவருகிறது.

பிரதேசவாசிகளின் உதவியுடன் நீர் இறைக்கும் இயந்திரத்தின் மூலம் கிணற்றுநீர் வெளியேற்றப்பட்டுள்ளதுடன், பிரதேசவாசிகளில் இருவர் கிணற்றுக்குள் குதித்து அவ்விருவரையும் மீட்டுள்ளனர் என்று, பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .