2026 ஏப்ரல் 02, வியாழக்கிழமை

கிண்ணியா சம்பவம்; இராமேஸ்வரன் எம்.பி இரங்கல்

R.Maheshwary   / 2021 நவம்பர் 24 , மு.ப. 10:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

 பி.கேதீஸ்

கிண்ணியா- குறிஞ்சாக்கேணியில்  படகுப் பாதை கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில், மாணவர்கள் உள்ளிட்ட பலர் உயிரிழந்துள்ள சம்பவம் கடும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது எனவும், இறந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நிதிச்செயலாளரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி இராமேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

 

நேற்று இடம்பெற்ற இந்த விபத்தானது, எம் மனங்களில் நீங்காத  இடம்பிடித்துள்ள ஒரு கோர சம்பவமாக அமையகின்றது . அத்துடன் பல கனவுகளை சுமந்த வண்ணம் பள்ளிக்குச் சென்ற அந்த பிஞ்சு குழந்தைகள்  மற்றும் பொருளாதார நலனை நோக்கி சென்ற குடும்ப உறவுகள்  அனைவரும் இந்த கோர விபத்தில் காலனின் பிடியில் சிக்கிக் கொண்டதை எண்ணும்போது மனது சொல்லென்னா துன்பத்தில் துடிக்கின்றது.

இந்த கோர விபத்தில் உயிர் நீத்த எம் சொந்தங்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை பகிர்ந்து கொள்கின்றேன். .இவ்விபத்தில்  வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் விரைவில் குணமடைய இறைவனை பிராத்திக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .