Kogilavani / 2021 மே 19 , மு.ப. 10:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
மஹேஷ் கீர்த்திரத்ன
உக்குவளை தாலிங்காமட கிராமசேவகரை தாக்கினார் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ள உக்குவளை பிரதேச சபையின் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் ஹிமாலி எரந்திகா, கட்சியின் உறுப்புரிமையிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
தாக்குதலுக்குள்ளான கிராமசேவர், ஜம்புகஸ்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றார்.
உக்குவளை கெந்தகொல்லாமட பிரதேசத்தில், கடந்த 16ஆம் திகதி குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 5,000 ரூபாய் கொடுப்பனவை வழங்குவதில் ஏற்பட்ட முரண்பாட்டின்போதே கிராமசேவகரை பிரதேச சபை உறுப்பினர் தாக்கியுள்ளார்.
இது தொடர்பில் பொலிஸில் செய்த முறைப்பாட்டையடுத்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், பிரதேச சபை உறுப்பினரை கைதுசெய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தினர்.
சந்தேகநபரை தலா 50,000 ரூபாய் சரீரப் பிணையில் செல்வதற்கு நீதவான் அனுமதியளித்தார்.
இந்நிலையிலேயே குறித்த உறுப்பினர் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் என்று கட்சியின் பொதுச்செயலாளர் தெரிவித்தார்.
17 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
1 hours ago
1 hours ago