Editorial / 2019 ஏப்ரல் 19 , மு.ப. 11:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன்
சித்திரைப் புத்தாண்டையொட்டி, பத்தனை-கிறேக்கிலி தோட்டத்தில், கிறேக்கிலி இளைஞர் கழகத்தின் ஏற்பாட்டில், “மண்ணின் மைந்தர்கள்” எனும் தொனிப்பொருளிலான கௌரவிப்பு நிகழ்வும் இசை நிகழ்ச்சியும், சமீபத்தில் இடம்பெற்றது.
தோட்டத்தின் பெருமையை நாடரியச் செய்த சாதனையாளர்களைக் கௌரவிக்கும் நிகழ்வின் பிரதம அதிதியாக, கொட்டகலை பிரதேச சபையின் தலைவர் ராஜமணி பிரசாத், சிறப்பு அதிதியாக கொட்டகலை பிரதேச சபையின் உப தலைவர் எம்.ஜெயகாந்த், விசேட அதிதியாக இலங்கை வங்கியின் தலவாக்கலை கிளையின் முகாமையாளர் எம்.ராமன், மவுண்ட்வேர்ணன் தமிழ் வித்தியாலயத்தின் அதிபர் அரியமுத்து என பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.
இதன்போது, அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், ஊடகவியலாளர்கள் எனப் பலரும் கௌரவிக்கப்பட்டதோடு, ஸ்டைல் இசைக்குழுவின் தலைவர் ரஜனி தலைமையிலான இசை நிகழ்ச்சியும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
1 hours ago
5 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago
5 hours ago
6 hours ago