Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
Kogilavani / 2017 ஒக்டோபர் 25 , பி.ப. 06:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
கேதீஸ்
தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிறேட்வெஸ்டன் மலைத்தோட்ட நிர்வாகத்தினதும் தோட்ட வைத்திய அதிகாரியினதும் அலட்சிய போக்கைக் கண்டித்து, அத்தோட்டத்தைச் சேர்ந்த சுமார் 300க்கும் மேற்பட்டத் தொழிலாளர்கள், இன்று காலை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அந்தத் தோட்டத்தைச் சேர்ந்த ஆர்.லெட்சுமன் (வயது 40) கிரெட்வெஸ்டன் பகுதியில் உள்ள ரயில் கடவையில், கடந்த 22ஆம் திகதி சென்றுகொண்டிருந்த வேளையில், காலிடறி விழுந்துள்ளார்.
இவரை மீட்டெடுத்த பொதுமக்கள், தோட்ட வைத்தியசாலைக்கு உடனடியாக கொண்டு சென்றுள்ளனர். அங்கு தோட்ட வைத்திய அதிகாரி உரிய நேரத்தில் வருகை தரவில்லை. இதேவேளை, தோட்டத்தில் அம்புலன்ஸ் வண்டி இருந்தும் இவரை மேலதிக சிகிச்சைக்காக, வேறு வைத்தியசாலைக்கும் கொண்டுசெல்லமுடியாத நிலையே இருந்துள்ளது. இதனையடுத்து, அவர் உயிரிழந்துவிட்டார்.இந்நிலையிலேயே, தோட்ட நிர்வாகத்தினதும் தோட்ட வைத்தியரினதும் அசமந்தப் போக்கைக் கண்டித்து, தோட்டத்தைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்டத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து, தோட்ட அதிகாரி இப்பிரச்சினைத் தொடர்பாகக் கடிதம் மூலம் அறிவிக்குமாறும், நாளை வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு, நடவடிக்கை மேற்கொள்வதாகவும் உறுதியளித்துள்ளார்.
இதனையடுத்து, இன்று வியாழக்கிழமை தொழிலாளர்கள் வழமைபோன்று பணிக்குத் திரும்புவர் என்று, தோட்டத் தலைவர் பிரகாஸ் தெரிவித்துள்ளார்.
மேற்படி நபரின் சடலத்தை வீதியில்வைத்து தோட்டத்தொழிலாளர்கள், செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
8 hours ago
8 hours ago