2025 மே 13, செவ்வாய்க்கிழமை

கிவ் தோட்டத்தில் 25 பேர் வெளியேற்றம்

Kogilavani   / 2020 ஒக்டோபர் 16 , பி.ப. 01:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சதீஸ்

பொகவந்தலாவ கிவ்தோட்டம் மேற்பிரிவு தோட்டத்தில் பெய்த கடும் மலை காரணமாக குடியிருப்புகள் சரிந்து விழும் ஆபாயத்தில் உள்ளதால், நான்கு குடும்பங்களைச்  சேர்ந்த 25 பேர் வெளியேற்றப்பட்டு, கிவ் தமிழ் வித்தியாலயத்தில் தற்காலிகமாகத் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்று, பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

60 வருடங்கள் பழைமைவாய்ந்த மேற்படி குடியிருப்புகளில் பாரிய வெடிப்புகள் காணப்படுவதோடு  குடியிருப்புகள் தாழிறங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் அம்பகமுவ பிரதேச செயலகம் தோட்ட இளைஞர்கள் ஆகியோர் ஒன்றிணைந்து பாதிக்கபட்ட மக்களுக்கு சமைத்த உணவுகளை வழங்கி வருகின்றனர்.

மேற்படித் தோட்டத்துக்கு விஜயம் மேற்கொண்ட மத்திய மாகாணசபையின் உறுப்பினர் கணபதி கனகராஜ் பாதிக்கபட்ட மக்களை சந்தித்துக் கலந்துரையாடியதுடன்  இவ்விடயத்தை இலங்கை தொழிலாளர் காங்ரஸின் பொதுச் செயலாளரும் வீடமைப்பு மற்றும் சமுக அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான  ஜீவன் தொண்டமானின் கவனத்துக்குக் கொண்டு வந்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X