Editorial / 2019 ஒக்டோபர் 21 , பி.ப. 06:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
மலையக மக்களுக்கு, குச்சிமிட்டாய் கூடப் பெற்றுத்தராத நவ சமசமாஜ கட்சியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரத்தின மலையக மக்களை ஒட்டுமொத்தமாகக் கேவலப்படுத்தியுள்ளார் என்று, ஊவா மாகாண முன்னாள் அமைச்சரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவருமான செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.
தேர்தலின் பின்னர், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமானை இந்தியாவுக்கு விரட்டுவதாக நவ சமசமாஜ கட்சியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரத்தின கூறியதை மேற்கோள் காட்டியுள்ள அவர், அவ்வாறே, தேர்தலுக்கு பின்னர், இதேபோன்று, வேறொரு பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவரை, நாட்டை விட்டு விரட்டுவதாகவும் கூறியுள்ளார்.
இவருடைய இந்தப் பேச்சு, இனவாதத்தைக் காட்டும் செயற்பாடு என்றும் அவ்வாறே, விக்கிரமபாகு ஆதரவளிக்கும் கட்சி, ஆட்சிக்கு வந்தால், மலையக மக்களின் எதிர்காலம் என்னவாகும் என்பது கேள்விக்குறியே என்றும் கூறினார்.
மலையக மக்கள் மீது கைவைப்பதற்கு, தொண்டமான் என்ற நபரே, அச்சுறுத்தலாக காணப்படுவதை அனைவரும் அறிந்து வைத்துள்ளனர் என்றும் சில அரசியல்வாதிகள், தங்களது அமைச்சுப் பதவிகளை தக்கவைத்துக்கொள்வதற்காக, மற்றவர்களிடம் மண்டியிட்டுச் செயற்படுவதைப் போன்று, தொண்டமான் குடும்பம், செயற்படாமல் இருப்பது, மற்றயைவர்களுக்கு பாரிய இடைஞ்சலாக இருப்பதாகவும் அவர் கூறினார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிகாலத்தில், தன்னால் முன்னெடுக்கப்பட்ட பல அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாக குறிப்பிட்டுள்ள அவர், வீரபாகுவின் வாழ்நாளில், குறைந்தது 10 நாள்களாவது, மலையத்தில் தொடர்ந்து தங்கியதுண்டா என்றும் அவர் கேள்வியெழுப்பினார்.
வெயில் காலங்களில், மலையகத்துக்கு சுற்றுலா வந்து சென்றவர்கள், மலையகத்தைப் பற்றிப் பேசும் போது, மலையக மக்கள் மீது விக்கிரமபாகு கொண்ட பற்று, ஆடு நனைகிறதென்று என்று ஓநாய் அழுவது போன்று உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
55 minute ago
5 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
5 hours ago
5 hours ago
6 hours ago