2026 மே 09, சனிக்கிழமை

dd

’குடிநீரைப் பயன்படுத்தி இரசாயனம் கலப்பதை நிறுத்தவேண்டும்’

சுஜிதா   / 2019 ஓகஸ்ட் 22 , பி.ப. 02:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

நுவரெலியா பிரதே செயலாளர் பிரிவுக்குட்பட்ட வட்டகொட, யொக்ஸ்போர்ட் தோட்டத்தில், தேயிலை மரங்களுக்கு தெளிப்பதற்காக இரசாயனங்களைக் கலப்பதற்கு, பிரதேச மக்களின் குடிநீர் பயன்படுத்தப்பட்டு வருவதாக, பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

குறித்த குடிநீர் குழாயை, ஒரு இடத்தில் கழற்றி, அதிலிருந்து பெறும் நீரைப் பயன்படுத்தி இரசாயனத்தைக் கலந்தபின்னர், மீண்டும் குழாயைப் பொறுத்தி விடுவதாகவும் இதன்மூலம், குறித்த குழாய் நீர் வழியாக, இரசாயனப் பதார்த்தம் சிறிதளவேனும் கலந்திருக்காதா என்று மக்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.

தேயிலை மரங்களை வளர்க்க, தோட்ட நிர்வாகங்கள் பல்வேறு திட்டங்களை முன்னெடுப்பதைப் போன்றே, தோட்டத்திலுள்ளவர்களைப் பாதுகாப்பதும், தோட்ட நிர்வாகத்தின் கடமை என்றும் எனவே, இவ்வாறு குடிநீர் வரும் குழாயை கழற்றி, இரசாயனப் பதார்த்தம் கலப்பதை நிறுத்தவேண்டும் என, மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .