எம். செல்வராஜா / 2019 பெப்ரவரி 17 , பி.ப. 05:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலக வங்கி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ், வெலிமடை ஊவா பென்ஹெல்ட் தோட்டத்தில், 16 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பாரிய குடிநீர் விநியோகத் திட்டம், மக்களின் பாவனைக்காக, நாளை மறுதினம் (19) கையளிக்கப்படவுள்ளது.
இந்நிகழ்வில், தேசிய நீர் வழங்கல் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாகக் கலந்துகொள்ளவுள்ளார்.
தேசிய நீர் வழங்கல் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டு வரும் உலக வங்கியின் இந்த வேலைத்திட்டம், பதுளை மாவட்டத்துக்கு உட்பட்ட பெருந்தோட்டங்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டமை இதுவே, முதற்றடவையாகும்.
பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமார், அமைச்சர் ரவூப் ஹக்கீமிடம் விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக, பதுளையில் இந்தத் திட்டம் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago