R.Maheshwary / 2022 பெப்ரவரி 06 , பி.ப. 12:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுமணசிறி குணதிலக
பிபிலை நகரில் தொலைபேசி விற்பனை நிலையங்களில் பெறுமதி மிக்க அலைபேசிகளைத் திருடிவந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய்,மகன் மற்றும் மகள் ஆகியோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என மொனராகலை பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று (5) சந்தேகநபர்கள் மூவரும் கைதுசெய்யப்பட்டதுடன், இவர்களிடமிருந்து 7 அலைபேசிகள் மற்றும் மின்விளக்கு ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.
குறித்த மூவரும் இந்த மாதம் 3ஆம் திகதி, பிபிலை நகரிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் அலைபேசிகளை கொள்வனவு செய்யும் போர்வையில் வருகைத் தந்து, அலைபேசிகளை திருடியுள்ளமை அங்கு பொறுத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கமெராவில் பதிவாகியுள்ளது.
இதற்கமைய முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர்கள் இதற்கு முன்னரும் பிபிலை மற்றும் மெதகம ஆகிய நகரங்களில் உள்ள அலைபேசி விற்பனை நிலையங்களிலிருந்து இரண்டு அலைபேசிகளை திருடியுள்ளமை தெரியவந்துள்ளது.
இவ்வாறு திருடப்பட்ட அலைபேசிகளுள் ஒன்று, மொனராகலை பிரதேசத்தில் விற்கப்பட்டுள்ளதுடன், அவ்வாறு திருடப்பட்ட அலைபேசிகளின் பெறுமதி 2,23,000 ரூபாய் என தெரியவந்துள்ளது.
சந்தேகநபர்கள் மூவரும் பிபிலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, தாயை நாளை (7) வரை விளக்கமறியலில் வைக்குமாறு, நீதவான் மக்சிலா சூரியஆராச்சி உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன் மகள் இம்முறை உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ளதால் அவரை பிணையில் விடுதலை செய்ததுடன், மகனை கெப்பட்டிபொல சிறுவர் காப்பகத்துக்கு அனுப்புமாறு உத்தரவிட்டுள்ளார்.
10 minute ago
16 minute ago
17 minute ago
18 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
16 minute ago
17 minute ago
18 minute ago