Kogilavani / 2017 ஜூன் 14 , மு.ப. 12:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
கு.புஸ்பராஜா
டயகம, மோனிங்டன் மேற்பிரிவில் பாடசாலை மாணவி ஒருவரை, பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்த முயன்ற குடும்பஸ்தர் ஒருவரை, டயகம பொலிஸார், இன்றுக் கைதுசெய்துள்ளனர்.
குறித்த தோட்டத்தைச் சேர்ந்த நபரொருவரே, இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மேற்படி மாணவி, தனது சக நண்பிகளுடன், நேற்றுக் காலை பாடசாலைக்கு சென்றுள்ளார். குறித்த மாணவியை வழியில் இடைமறித்த அந்நபர், மாணவியை இழுத்துச்சென்று வன்புணர்வுக்கு உட்படுத்த முயன்றுள்ளார்.
இதனைக் கண்ட ஏனைய மாணவிகள் கூக்குரலிடவே, சந்தேக நபர் தப்பிச் சென்றுள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் பாடசாலை நிர்வாகத்துக்கு அறிவிக்கப்பட்டதைத்த தொடர்ந்து, பாடசாலை நிர்வாகம் டயகம பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதுடன், மாணவியை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வந்த பொலிஸார் சந்தேகத்தின் பேரில் அதே தோட்டத்தைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவரை கைதுசெய்துள்ளதுடன் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago