2026 ஏப்ரல் 09, வியாழக்கிழமை

குப்பைகளை கொட்டுவதற்கு எதிர்ப்பு

மு.இராமச்சந்திரன்   / 2017 ஜூன் 05 , பி.ப. 05:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹட்டன் - டிக்கோயா நகரசபைக்கு உட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை,  ஹட்டன் சந்தைப் பகுதியில் கொட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஹட்டன் நகர சந்தைப்பகுதி வியாபாரிகள் இன்றுக் காலை, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குப்பைகளை சந்தைப் பகுதியில் கொட்டுவதனால் தமது வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சந்தைப் பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதால் நுகர்வோர் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.

குப்பை விவகாரம் தொடர்பில், இன்றுக் காலை  ஹட்டன் நகரசபையின் செயலாளருடன்  இடம்பெற்ற கலந்துலையாடலில் இணக்கப்பாடு எட்டாத நிலையிலேயே, கவனயீர்ப்பு போராட்டத்தை வியாபாரிகள் முன்னெடுத்துள்ளனர்.

இது தொடர்பில் ஹட்டன் நகரசபையின் செயலாளர் எஸ்.பிரியதர்ஷினியிடம் கேட்டபோது,

“ஹட்டன் டிக்கோயா நகரசபை பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டுவதற்கு பொருத்தமான இடமொன்று இல்லாதுள்ளது. வெளிப் பிரதேசங்களில் குப்பைகளை கொட்ட முற்பட்பட்டால் பல்வேறு எதிர்ப்புகள்  ஏற்படுகின்றன. குப்பைகளை  கொட்டுவதற்கு பொருத்தமான இடத்தை பெற்றுத்தருமாறு,  அரசியல்வாதிகளிடம் கோரிக்கை விடுத்தபோதிலும்  இதுவரையில் இடம்கிடைக்கவில்லை.

இவ்வாறான நிலையிலேயே, ஹட்டன் நகரசபைக்கு உட்பட்ட  சந்தைப்  பகுதியில்  தற்காலிகமாக குப்பைகள் கொட்டப்பட்டன” என்று அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .