2026 மே 09, சனிக்கிழமை

dd

குப்பைகளைப் போடுவதற்கான பைகள் வழங்கி வைப்பு

Editorial   / 2020 பெப்ரவரி 11 , பி.ப. 06:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சிவாணி ஸ்ரீ, ஏ.ஏ.எம்.பாயிஸ்

சிவனொளிபாத மலைக்குச் செல்லும் யாத்திரிகர்கள், குப்பைகளை ஆங்காங்கே வீசுவதைத் தடுக்கும் வகையில், அவர்களுக்கு, குப்பைகளைப் போடுவதற்கானப் பைகளை வழங்கும் வேலைத்திட்டம் ஒன்றை, சப்ரகமுவ மாகாண சபை மேற்கொண்டுள்ளது. 

பலாபந்த, ஏரத்ன வீதிகள் வழியாகச் சிவனொளிபாத மலைக்கு செல்லும் யாத்திரிகர்ளுக்கே, இவ்வாறு குப்பைச் சேகரிக்கும் பைகள் வழங்கப்படுகின்றன. 

குப்பைகளைச் சேகரிப்பதற்கான பைகளை வழங்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு, நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்நிகழ்வில், சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ கலந்துகொண்டு, இந்தப் பைகளை, யாத்திரிகர்களுக்கு வழங்கி வைத்தார். 

மேற்படி பைகள், ஜோன் கீல்ஸ் நிறுவனத்தால், சப்ரகமுவ மாகாண சபைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இது குறித்து கருத்துத் தெரிவித்த மாகாண ஆளுநர், பலாபந்த, ஏரத்ன ஆகிய இரண்டு வீதிகளின் ஊடாகச் சிவனொளிபாத மலைக்கு யாத்திரை மேற்கொள்வோர், பொலித்தீன், பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பைகளை வீதிகளில் போட்டு, சுற்றாடலை மாசுபடுத்துகின்றனர் என்றும் இதனைத் தவிர்ப்பதற்காகவே, இவ்வாறான பைகள் வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார். 

எனவே, தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பைகளில் இவற்றைச் சேகரித்து, குப்பைகளை சேகரிக்கும் இடத்துக்கு ஒப்படைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .