Ilango Bharathy / 2021 செப்டெம்பர் 22 , மு.ப. 07:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாலித ஆரியவன்ஸ
கித்துல் உற்பத்தியில் பாரிய பாதிப்பை ஏற்படுத்தி வரும் குரங்குகளுக்கு தீர்வாக குறைந்தளவு
மின்சாரம் பாயும் மின் உபகரணம் ஒன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
குறித்த உபகரணத்தை கித்துள் மரத்தின் அடியில் பொருத்துவதன் மூலம் கித்துல் உற்பத்திக்கு
குரங்குகளால் ஏற்படும் பாதிப்புகைளை குறைத்துக்கொள்ள முடியும் என, கித்துள் அபிவிருத்தி
சபையின் தவிசாளர் சட்டத்தரணி கிஹான் பெரேரா தெரிவித்துள்ளார்.
குறித்த உபகரணத்தை சூரியசக்தி மூலம் செயற்படுத்த முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். பசறை, எல்ல மற்றும் லுணுகல பகுதிகளில் கித்துள் உற்பத்தியாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை இனம்கண்டு, வருடாந்தம் கித்துள் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில், கித்துள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்ணான்டோவின் ஆலோசனைக்கமைய இந்த உபகரணம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .