R.Maheshwary / 2022 ஓகஸ்ட் 25 , மு.ப. 09:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
பி.கேதீஸ்
தலவாக்கலை- நாவலப்பிட்டி பிரதான வீதி அகலப்படுத்தப்படாமல் குறுகலாக காணப்படுவதால் தாம் கடும் சிரமங்களுக்கும் பல்வேறு அசௌகரியங்களுக்கும் முகம் கொடுக்க வேண்டியுள்ளதாக அவ்வீதியைப் பயன்படுத்தும் வாகன சாரதிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த வீதியானது பிரித்தானியர் காலத்தில் அமைக்கப்பட்ட வீதி எனவும், அதன் பின்னர் இதுவரை அகலப்படுத்தப்படாமலும், முறையான அபிவிருத்திகள் மேற்கொள்ளப்படாமலும் உள்ளதால், வீதியை பயன்படுத்துவதில் கடும் சிரமங்களை எதிர்நோக்குவதாக தெரிவிக்கின்றனர்.
கடந்த சில நாட்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக, வீதியில் இருந்த நிலக்கீல் மற்றும் கற்கள் அடித்துச் செல்லப்பட்டு தற்போது அனைத்து இடங்களும் உடைந்து காணப்படுவதாகவும், இதன் காரணமாக சிறிய வாகனங்களான ஓட்டோ, கார்கள், மோட்டார் சைக்கிள்கள், வேன்கள் போன்றவை செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
நாவலப்பிட்டி நகரில் இருந்து திம்புள பத்தனை சந்தி வரையிலான 30 கிலோமீற்றர் தூரம் எவ்வித அபிவிருத்தியும் மேற்கொள்ளப்படவில்லை, மேலும் வீதி மிகவும் குறுகலாக செங்குத்தான வளைந்த சரிவுகளுடன் இருப்பதால், இரண்டு கதவுகள் கொண்ட பேருந்துகள் மற்றும் பிற கனரக வாகனங்கள் பல பெரிய வாகனங்களில் செல்லும் போது முந்திச் செல்ல முடியாமல் அதன் பின்னே தொடர்ந்து வாகனங்கள் செலுத்த வேண்டியுள்ளன.
வீதியின் இருபுறமும் உள்ள அனைத்து மதகுகளின் பாதுகாப்பு பகுதிகள் உடைந்து வீதி முழுவதும் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த வீதியானது தலவாக்கலை, டயகம, அகரப்பத்தனை, போபத்தலாவ, மெனிக்பாலம, மன்ராசி, ஹோல்புரூக், மெரயா, திஸ்பன்ன, எல்ஜின், இராணிவத்தை, நாகசேன, லிந்துலை, பால்மஸ்டன், நானுஓயா, பத்தனை, போகாவத்த, கொட்டகலை மற்றும் நாவலப்பிட்டிக்கு செல்லும் குறுகிய வீதி என்றும் சுட்டிக்காட்டுகின்றனர்.
5 hours ago
6 hours ago
6 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
6 hours ago
9 hours ago