2025 ஒக்டோபர் 29, புதன்கிழமை

குளவி கொட்டுக்கு இலக்காகி நால்வர் காயம்

Janu   / 2025 ஏப்ரல் 23 , பி.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

குளவி கொட்டுக்கு இலக்காகி நால்வர் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் புதன்கிழமை (23) மதியம் இடம் பெற்றுள்ளதாக மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

குளவி கொட்டுக்கு இலக்கானவர்கள் மஸ்கெலியா , சாமிமலை கவரவிலை ஏ பிரிவை சேர்ந்த 35 வயது முதல் 50 வயதுக்கு உட்பட்டவர்கள் எனவும் அதில் ஒருவர் தோட்ட தொழிலாளர் ஏனவும் மூன்று பேர் வழி போக்கர்கள் எனவும் தெரியவந்துள்ளது.

 குறித்த நால்வரும் சிகிச்சைக்காக மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மூவர் மேலதிக சிகிச்சைக்காக டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X