2026 மே 09, சனிக்கிழமை

குளித்துக்கொண்டிருந்தவர்கள் மீது குளவித் தாக்குதல்

Editorial   / 2020 பெப்ரவரி 24 , பி.ப. 03:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சுதத் எச்.எம்.ஹேவா

கெசல்கமுவ ஓயாவில் குளித்துக்கொண்டிருந்த 17 பேர், குளவிக்கொட்டுக்கு உள்ளான நிலையில், நாவலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பிங்கிரிய பிரதேசத்திலிருந்து, சிவனொளிபாத மலைக்கு யாத்திரை மேற்கொண்டிருந்தவர்களே, இவ்வாறு குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

அவர்கள் யாத்திரையை நிறைவுசெய்துகொண்டு வீடு திரும்பும் வழியில், கெசல்கமுவ ஓயா ஆற்றுக்கு குளிப்பதற்காகச் சென்றுள்ளனர் என்றும் இதன்போதே, குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர் என்றும் தெரியவருகிறது.

குளவிக்கொட்டுக்கு இலக்கானவர்களில்,  4 வயது ஆண் குழந்தையொன்றும் ஐந்து பெண்களும், 11 ஆண்களும் உள்ளடங்குகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .