Editorial / 2025 நவம்பர் 10 , மு.ப. 10:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் சுகாதார அறிவியல் பீடத்தின் மூன்றாம் ஆண்டு மாணவி ஒருவர் கண்டி தேசிய மருத்துவமனையின் நரம்பியல் அறுவை சிகிச்சை தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தனது வீட்டின் குளியலறையில் விழுந்து உயிரிழந்துள்ளார்.
கண்டி, ஹன்டெஸ்ஸாவைச் சேர்ந்த 24 வயதுடைய எச்.எம்.எல்.டி. ஜெயதிலகா என்ற இளம் பெண்ணே உயிரிழந்துள்ளார். இவர், மேற்படி பல்கலைக்கழகத்தின் மூன்றாம் ஆண்டு மாணவி ஆவார்.
மேற்படி பல்கலைக்கழகத்தில் டிசம்பர் மாதம் விடுமுறையில் நடைபெறவிருந்த தேர்வுக்காக படித்துக்கொண்டிருந்தபோது, விபத்துக்குள்ளானார்.
குளியலறையில் விழுந்ததில் தலையில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக கண்டி தேசிய மருத்துவமனையின் நரம்பியல் அறுவை சிகிச்சை தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் உயிரிழந்தார். சம்பவம் குறித்து கலஹா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
43 minute ago
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
1 hours ago
3 hours ago