R.Maheshwary / 2022 ஜூலை 13 , மு.ப. 10:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஸ
நோர்வூட் பிரதேச்சபையின் தவிசாளருக்கு எதிராக, பொகவந்தலாவை- பிரிட்வெல் தோட்ட மக்கள் நேற்று (12) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமது தோட்டத்தின் காணியொன்றை பலவந்தமாக கையகப்படுத்தி, தவிசாளர் கடைத் தொகுதியொன்றை அமைப்பதாக குற்றஞ்சுமத்தியே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
ஹட்டன்- பொகவந்தலாவை பிரதான வீதியின் பொகவந்தலாவைக்கு அண்மையில் பிரிட்வெல் தோட்டம் காணப்படுவதுடன், அந்த தோட்டத்தின் ஒரு பகுதியில் நோர்வூட் பிரதேச சபையின் தவிசாளர் கடைத் தொகுதிகைளை அமைத்துள்ளதாகவும் தோட்டத் தொழிலாளர்கள் குற்றஞ்சுமத்துகின்றனர்.
குறித்த தோட்ட நிர்வாகத்தால் இந்த விடயம் தொடர்பில், நோர்வூட் பொலிஸ் நிலையத்தில் பல முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த பகுதி நோர்வூட் பிரதே சபைக்கு உரியதென தெரிவித்து, தவிசாளர் கட்டுமானப் பணிகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்த விடயம் தொடர்பில் நோர்வூட் பிரதேச்சபையின் தவிசாளர் ரவி குழந்தைவேலிடம் வினவியபோது, பிரதான வீதியிலிருந்து பல அடிகள் தூரத்திலிருக்கும் அந்த பகுதி, நோர்வூட் பிரதேசசபைக்கு சொந்தமானது என்றார்.
எனவே அந்த இடம் தொடர்பில் பிரச்சினை இருந்தால் நீதிமன்ற நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு தான் பிரிட்வெல் தோட்ட நிர்வாகத்திடம் அறிவித்துள்ளதாகவும் தெரிவித்தார்.



5 minute ago
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
2 hours ago
2 hours ago
3 hours ago