Kogilavani / 2021 மே 11 , மு.ப. 10:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன்
முடிவுக்கு வந்துள்ள கூட்டு ஒப்பந்தத்தை புதுப்பித்துக்கொள்வதற்கு மலையகத்திலுள்ள அனைத்துத் தொழிற்சங்கங்ளும் முன்வரவேண்டும் என்றும் அப்போதுதான் தொழிலாளர்களின் தொழில் உரிமைகளையும், சலுகைகளையும் உரியவகையில் பாதுகாத்துக்கொள்ள முடியும் என்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளரும் மஸ்கெலியா பிரதேச சபையின் உப தலைவருமான பெரியசாமி பிரதீபன் தெரிவித்தார்.
ஹட்டனில் நேற்று(10) முன்தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்துரைத்த அவர்,
தோட்டத் தொழிலாளர்களுக்கு நிர்வாகங்களால் கடும் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன என்றும் 8 மணிநேரம் தொடர் வேலை உட்பட தொழிற்சுமைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார்.
மேலதிகக் கொழுந்துக்கான கொடுப்பனவுகள் வழங்கப்படுவதில்லை எனச் சுட்டிக்காட்டியதுடன், தொழிலாளர்களுக்காகக் குரல் கொடுக்கும் தொழிற்சங்கங்களை ஒடுக்குவதற்கும் கம்பனிகள் முயற்சிக்கின்றன என்றுச் சாடினார்.
இதன் ஓர் அங்கமாகவே தொழிலாளர்களின் மாதாந்த சம்பளத்திலிருந்து சந்தா அறிவிடுவதை கம்பனிகள் நிறுத்தியுள்ளன எனத் தெரிவித்த அவர், தொழிலாளர்களுக்கு பாதுகாப்புக் கவசமாக உள்ள தொழிற்சங்கங்கள் ஒடுக்கப்படுவதை அனுமதிக்க முடியாது என்றும் தெரிவித்தார்.
கூட்டு ஒப்பந்தம் அமுலுக்கு வருவதற்கு முன்னரும் சந்தா அறவிடப்பட்டுள்ளது என்பதை துரைமார் சம்மேளனம் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.
எனவே, தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து கூட்டு ஒப்பந்தத்தைப் புதுப்பிப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
5 minute ago
25 minute ago
44 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
25 minute ago
44 minute ago
1 hours ago