2026 மே 09, சனிக்கிழமை

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் படுகொலை

மொஹொமட் ஆஸிக்   / 2019 செப்டெம்பர் 15 , பி.ப. 05:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

கண்டி - தலாத்துஒய, மயிலப்பிட்டியப்  பிரசேத்தில், நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில், ஒருவர் கூரிய ஆயுதத்தால் குத்தப்பட்டு, படுகொலைச் செய்யப்பட்டுள்ளார் என்று, தலாத்துஓயா பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம், நேற்று (14) மாலை இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில் மயிலப்பிட்டிய கல்லிந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த எச்.எம்.வீரசூரிய (வயது 38) என்பவரே, இவ்வாறு படுகொலைச் செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய இருவரை, பொலிஸார் கைதுசெய்துள்ளடன் அவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

உயிரிழந்தவரின் நபரின் சடலம், பிரேப் பரிசோதனைக்காக, கண்டி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பம் தொடர்பில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .