2025 ஜூலை 26, சனிக்கிழமை

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு குடும்பஸ்தர் பலி

Kogilavani   / 2017 ஜூலை 26 , பி.ப. 12:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்பிலிப்பிட்டிய, சுஹந்தபுர, நவநகர பிரதேசத்தில் செவ்வாய்க்கிழமை இரவு, இருவருக்கு இடையில் ஏற்பட்ட கைகலப்பில்,  ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக, எம்பிலிப்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தில்,  மேற்படிப் பிரதேசத்தைச் சேர்ந்த எல்.பீ.சந்திரசிறி (வயது 58) என்பவரே உயிரிழந்துள்ளார்.

இருவருக்குமிடையில், பணம் கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட  முரண்பாடே,  இச்சமப்வத்துக்குக் காரணமென, ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இச்சம்பவத்தில் காயமடைந்த நபரை, எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதித்தப்போதிலும் அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாக, வைத்தியசாலை வட்டாரம் தெரிவித்தது.

பிரேத  பரிசோதனைக்காக வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய நபரைக் கைதுசெய்துள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X