R.Maheshwary / 2022 ஒக்டோபர் 02 , மு.ப. 09:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
ராமு தனராஜா
மடுல்சீமை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கெரண்டியெல ஆற்றிலிருந்து ஆணொருவரின் சடலம் மடுல்சீமை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
சடலமாக மீட்கப்பட்ட நபர் 37 வயதுடையவர் என்றும் இவர் கடந்த 28ஆம் திகதி முதல் காணாமல் போயிருந்ததாக 29ஆம் திகதி மடூல்சீமை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது .
இதனையடுத்து, 5பொலிஸ் குழுவினரும் பொதுமக்களும் இணைந்து தேடுதலை மேற்கொண்ட போது, கெரண்டியெல ஆற்றுப் பகுதியில் குறித்த நபர் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார் .
சடலம் நீதவான் பார்வையிட்டதன் பின்னர், பதுளை வைத்தியசாலை பிரேத அறையில் வைத்திய பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை மடுல்சீமை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago