2026 மே 09, சனிக்கிழமை

dd

கேகாலை மாவட்டச் செயலாளர் கடமைகளைப் பொறுப்பேற்பு

Editorial   / 2020 ஜனவரி 31 , பி.ப. 12:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிவாணிஸ்ரீ

 

கேகாலை மாவட்டத்தின் புதிய மாவட்டச் செயலாளராக மஹிந்த எஸ்.வீரசூரிய, கேகாலை  மாவட்டச் செயலகத்தில், நேற்று (31) தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.

கம்பொல ரந்தொல மகா வித்தியாலயத்தில் தனது ஆரம்பக் கல்வியை கற்ற அவர், ஸ்ரீ ஜயவர்தனபுர,   களனி ஆகிய பல்கலைக்கழகங்களில் முகாமைத்துவம், சமூக அறிவியல், பொருளாதாரம், மனித வளம் உட்பட பல்வேறு துறைகளில் பட்டங்களைப் பெற்றுள்ளார்.

1995ஆம் ஆண்டு இலங்கை நிர்வாக சேவையில் இணைந்த மஹிந்த எஸ்.வீரசூரிய, களுவரகஸ்வேவ பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளராகவும் கேகாலை விவசாயத் திணைக்களத்தின் உதவி ஆணையாளராகவும், களவான, நிவித்திகல ஆகிய பிரதேச செயலகங்களின் செயலாளராகவும், இரத்தினபுரி மாவட்டச் செயலகத்தின் மேலதிக மாவட்டச் செயலாளராகவும், சப்ரகமுவ மாகாண சபையின் பிரதான அமைச்சு மற்றும் கல்வி அமைச்சு என்பவற்றின் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.

அத்துடன் இலங்கைக்கான சர்வதேச மாணவர்களின் தரப்படுத்தல் சம்மேளனத்தின் ஆணையாளராகவும் கடமையாற்றி வருகின்றார்.

இவரது சேவையைப் பாராட்டி,  தர்மபால அமைப்பின் மூலம் இவருக்கு தேசபந்து விருது  வழங்கி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .