2025 மே 19, திங்கட்கிழமை

கேகாலை மாவட்டத்தில் எலிக்காய்ச்சலால் இருவர் மரணம்

R.Maheshwary   / 2022 ஓகஸ்ட் 04 , மு.ப. 09:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

என். ஆராச்சி

கேகாலை மாவட்டத்தில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் இரண்டு பேர் எலிக்காய்ச்சலால் உயிரிழந்துள்ளதாக கேகாலை மாவட்ட தொற்று நோய் தொடர்பான விசேட வைத்தியர் சுஜீவ பண்டார தெரிவித்துள்ளார்.

மேலும்  இதுவரை 323 பேர் எலிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார்.

குறித்த இரண்டு மரணங்களும்  வரகாபொல மற்றும் கலிகமுவ ஆகிய சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவில் பதிவாகியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

அத்துடன் அரநாயக்கவில் 55 பேரும் மாவனெல்ல- 46, ரம்புக்கனை- 23, கேகாலை- 42, கலிகமுவ-  26, வரகாபொல-30, புளத்கொஹீபிட்டிய- 20, எட்டியாந்தோட்டை- 19, ருவன்வெல்ல- 21 தெஹியோவிட்ட- 34 தெரணியகலையில் 7 பேர் இதுவரை எலிக்காய்ச்சலுக்கு உள்ளாகியுள்ளனர் என்றார்.

காய்ச்சலுடன் உடல் வலி இதன் அறிகுறி என தெரிவித்த அவர், நோய் அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாக அரசாங்க வைத்தியசாலைகளுக்குச் சென்று சிகிச்சைப் பெற வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

எலிக்காய்ச்சலுக்கான பக்டீரியாவானது எலி போன்ற உயிரினங்கள் மூலம் அதன் நடமாட்டங்கள் அதிகமுள்ள இடங்களில் பரவுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X