2026 ஜனவரி 15, வியாழக்கிழமை

கைகள், கால்கள் கட்டப்பட்ட நிலையில் ஆணின் சடலம் மீட்பு

Editorial   / 2023 ஜூன் 04 , மு.ப. 08:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்

வலப்பனை பிரதேசம் மத்துரட்ட பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கோப்பி வத்த கலபட விகாரை பகுதியில் பொசன் தினமான (03) மாலை தனி வீடொன்றில் கை,கால் கட்டப்பட்டு உயிரிழந்த நிலையில் வயோதிபர் ஒருவரின் சடலத்தை மத்துரட்ட பொலிஸார் மீட்டுள்ளனர்.

இவ்வாறு சடலமாக மீட்க்கப்பட்டவர் தெகேகெதர வீ.எம்.அபேகோன் பண்டார (வயது 73) என அடையாளம் காணப்பட்டுள்ளதாக மத்துரட்ட பொலிஸார் தெரிவித்தனர்.

வீட்டில் தனது மனைவியுடன் வாழ்ந்து வந்த குறித்த வயோதிபரின் மனைவி, பொசன் தினத்தில் கலபட விகாரைக்கு வழிப்பாட்டுக்காக  காலை சென்று மாலை வீடு திரும்பிய போது கணவர் நித்திரை செய்த கட்டிலில் அவரின் கை மற்றும் கால்கள் கட்டப்பட்ட நிலையில் உயிரிழந்து  கிடந்துள்ளதை அவதானித்து அயலவர்கள் மற்றும் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மற்றும் அயலவர்கள் சடலத்தை மீட்டுள்ளனர்.

அதேவேளை, உயிரிழந்த வயோதிபர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வரும் அதேவேளை சடலம் பிரேத பரிசோதணைக்காக ரிகிலகஸ்கட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக  மத்துரட்ட பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X