R.Maheshwary / 2021 செப்டெம்பர் 13 , பி.ப. 05:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
நீலமேகம் பிரசாந்த்
பொகவந்தலாவ பகுதியில் இன்றும் பல பகுதிகளில் சட்டவிரோதமாக மாணிக்கல் அகழ்வு இடம்பெற்று வருவதாகத் தெரிவித்த இ.தொ.கா உபச்செயலாளர் சச்சுதானந்தன், இவ்வாறு சட்ட விரோதமாக மாணிக்ககல் அகழ்வில் ஈடுபடும் நபர்களுக்கு பின்புறத்தில் நின்று கைக்கொடுப்பது வரும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் இளைஞரணி தலைவர் என்பது பலருக்கும் தெரியும் என்றார்.
அதுமட்டுமல்லாமல் பால் உற்பத்தி பண்ணைகளை அமைப்பதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.ஆனால் இவர்கள் இ.தொ.காவை விமர்சனம் பண்ணினால் மாத்திரமே எதிர்கால அரசியல் உண்டென நம்பி இ.தொ.காவை குற்றம் சுமத்தி வருகின்றனர் என்றார்.
மக்களுக்கு நன்மையூட்டும் விடயங்களை மாத்திரமே இ.தொ.கா கொண்டு வரும். ஆனால் சில பொய் வதந்திகளையும் உண்மையற்ற விமர்சனைகளையும் முன்வைத்து மக்களை திசைத்திருப்ப பார்க்கும் இவ்வாறான தரகர்களை மக்கள் ஓட ஓட விரட்ட வேண்டுமென இ.தொ.கா உபச்செயலாளர் சச்சுதானந்தன் குறிப்பிட்டுள்ளார்.
8 minute ago
1 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
1 hours ago
4 hours ago