2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

கைதியிடம் பொதியை கையளித்தவர் சிக்கினார்

R.Maheshwary   / 2022 ஒக்டோபர் 05 , பி.ப. 04:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஷேன் செனவிரத்ன

தும்பர சிறைச்சாலையிலிருந்து வழக்கு விடயமாக நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட கைதியொருவருக்கு நீதிமன்ற வளாகத்தில் கைத்து பொதியொன்றை வழங்க முயற்சித்த நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைதி கையில் வரிசையில் நீதிமன்ற வளாகத்துக்குள் அழைத்துச் செல்லப்பட்ட போது, சந்தேகநபர் பொதி ஒன்றை வழங்க முயற்சித்துள்ளதை சிறைச்சாலை அதிகாரியொருவர் கண்டுள்ளார்.

பின்னர், அந்த பொதியை பரிசோதித்த போது, அதற்குள் இரண்டு கைபேசிகள், சிம் அட்டைகள் ஐந்து, புகையிலை என்பன வைக்கப்பட்டிருந்ததாகவும் சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரிடம் விசாரணைகளை முன்னெடுத்த போது பெண்ணொருவர் குறித்த பொதியை கைதியிடம் வழங்குமாறு  கூறி தன்னிடம் கையளித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

 சந்தேகநபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .