R.Maheshwary / 2021 ஒக்டோபர் 01 , பி.ப. 03:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
பி.கேதீஸ்
தலவாக்கலை -கட்டுக்கலை தோட்டத்தில் தோட்ட உதவி அதிகாரி மீதும் வெளிக்கள உத்தியோகத்தர்கள் மீதும் தாக்குதலை மேற்கொண்டனர் என்ற சந்தேகத்தின் பேரில் ,தலவாக்கலை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட 9 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 5ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நுவரெலியா மாவட்ட நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 28ம் திகதி கட்டுக்கலை தோட்டத்தில் தொழிலாளர்கள் சிலருக்கும் அத்தோட்ட உதவி அதிகாரி மற்றும் வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் பின்னர் கைகலப்பில் முடிந்துள்ளது.
தோட்ட உதவி அதிகாரி மீதும் வெளிக்கள உத்தியோகத்தர்கள் மீதும் தாக்குதலை மேற்கொண்டனர் என்ற சந்தேகத்தின் பேரில் 9 சந்தேக நபர்களை (தொழிலாளர்களை) தலவாக்கலை பொலிஸார் கைது செய்து இன்று நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோதே, நீதவான் இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.
அதேவேளை, தோட்ட உதவி அதிகாரி மற்றும் உதவி வெளிக்கள உத்தியோகத்தர்களால் தாக்கப்பட்டதாக கூறி, லிந்துலை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த இரண்டு பெண் தொழிலாளர்களும் இன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜராகியபோது, அவர்களையும் எதிர்வரும் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
17 minute ago
22 minute ago
2 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
22 minute ago
2 hours ago
5 hours ago