2026 மே 09, சனிக்கிழமை

dd

கொங்காலை பணிப்பகிஷ்கரிப்பு 10ஆவது நாளாக தொடர்ந்தது

Editorial   / 2019 செப்டெம்பர் 19 , மு.ப. 09:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீலமேகம் பிரசாந்த்

 

தோட்டத்துரையை வெளியேற்றுமாறு கோரி, கொங்காலை தோட்டத் தொழிலாளர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் பணிப்பகிஷ்கரிப்பு, நேற்று (18), 10ஆவது நாளாகவும் தொடர்ந்தது.

கொத்மலை பிரதேச சபைக்குட்பட்ட இந்தத் தோட்டத்தின் தலைரை, தோட்ட துரை அடிக்க முற்பட்டார் என்று தெரிவித்தே, இந்தப் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள தோட்டத் தொழிலாளர்கள், தோட்டத்துரையின் அடிவடித்தனத்துக்கு முடிவுகட்டும் வரை, இந்தப் பணிப்பகிஷ்கரிப்பு தொடரும் என்றும் தோட்டத்​துரை, தோட்டத் தலைரிடம் மன்னிப்புக் கேட்டால், இல்லையேல், அவர் இடமாற்றம் செய்யப்பட்டால் மாத்திரமே, தாம் மீண்டும் பணிக்குச் செல்வதாகவும் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .