2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

கொச்சிக்கடை குண்டுவெடிப்பில் ஐந்து வயது சிறுமியும் பலி

Editorial   / 2019 ஏப்ரல் 26 , மு.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்

உயிர்த்த ஞாயிறன்று (21) கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டு வெடிப்பில், பூண்டுலோயா சீன் கீழ் பிரிவைச் சேர்ந்த ரீகன் லீலா ரித்திகா என்ற ஐந்து வயது சிறுமியும் கொல்லப்பட்டுள்ளார்.

சிறுமியின் குடும்பம், வத்தளை பகுதியில் தற்காலிகமாக வசித்துவருவதாகவும் உயிர்த்த ஞாயிறன்று, கொழும்பு கொச்சிக்கடை தேவாலயத்தில் இடம்பெற்ற ஆராதனையில் கலந்துகொள்வதற்காகச் சென்றிருந்த போதே, இந்த அனர்த்தத்தை எதிர்கொண்டுள்ளனர் என்றும் தெரியவருகிறது.

இச்சம்பவத்தில் சிறுமியின் பெற்றோர் சிறிய காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த சிறுமியின் சடலத்தை, சிறுமியின் பெற்றோர் அடையாளங்காட்டியுள்ளனர்.

இதனையடுத்து, சடலம் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டு, சீன் தோட்டத்துக்கு, நேற்று (26) இரவு எடுத்துவரப்பட்டுள்ளதுடன், சிறுமியின் வீட்டில் பொதுமக்களின் அஞ்சலிக்காக  வைக்கப்பட்டுள்ளது.

சீன் தோட்ட பொது மயானத்தில், சடலம் இன்று பகல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளதென்றும் இதனைக் கருத்திற்கொண்டு, சீன் கீழ் பிரிவு தோட்டம், பூண்டுலோயா நகரத்தின் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் நுவரெலியா பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது .


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .