Editorial / 2025 ஜூன் 20 , பி.ப. 02:10 - 0 - {{hitsCtrl.values.hits}}

மே 06 ஆம் திகதி இடம்பெற்ற உள்ளூராட்சி சபை தேர்தலில் இரத்தினபுரி மாவட்டம் இறக்குவானை தேர்தல் தொகுதியின் கொடகவெல பிரதேச சபையை தேசிய மக்கள் சக்தி வெற்றி கொண்டதுடன் அச்சபைக்கான தலைவர், பிரதி தலைவர் தெரிவு வெள்ளிக்கிழமை (20) இடம்பெற்றது.
இத்தெரிவின் போது? தேசிய மக்கள் சக்தியின் ஆர்.எஸ்.டி.. கமகே குலரத்ன 16 வாக்குகளைப் பெற்று தலைவராகவும் பிரகீத் அனுருத்த பிரதி தலைவராகவும் தெரிவு செய்யப்பட்டனர். எதிர்க்கட்சியினருக்கு 14 வாக்குகள் மாத்திரம் கிடைக்கப் பெற்றிருந்ததோடு 02 வாக்குகள் நிராகரிக்கப்பட்டு இருந்தது.
இறக்குவானை தேர்தல் தொகுதியின் (கொடகவெல பிரதேச சபை) தேசிய மக்கள் சக்தியின் அமைப்பாளராக பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் செயற்படுகின்றார். இந் நிலையில் இவ் சபையின் வெற்றியானது எந்தவித தங்கு தடையின்றி மக்களுக்கான பணிகளை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல மீண்டும் கிடைக்கின்ற ஓர் அங்கீகாரமாகும் என பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார்.


4 minute ago
15 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
15 minute ago
1 hours ago
1 hours ago