2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

கொட்டகலையில் யானை தாக்கியதில் இளைஞன் படுகாயம்

Janu   / 2025 மார்ச் 13 , பி.ப. 03:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெரும் காட்டுப்பகுதியில் யானைகள் மனித மோதல்கள் இடம்பெற்ற சம்பவங்கள் பற்றி அடிக்கொரு தடவை செய்திகள் வருகின்றன. அதில், மனிதர்கள் பலர் உயிரிழந்துள்ளனர். மனிதர்களால் முன்னெடுக்கப்பட்ட வேட்டைகளில் யானைகளும் மரணிந்துள்ளன.

எனினும், ஹட்டனில் யானையொன்று, இளைஞனை தாக்கிய சம்பவம், புதன்கிழமை (12) இரவு இடம்பெற்றுள்ளது. அது காட்டு யானையல்ல, தேர்பவனிக்காக கொண்டுவந்த யானையாகும்.

ஹட்டன்- கொட்டகலை நகரிலுள்ள  ஆலயமொன்றில் நடைபெற்ற தேர் பவனிக்காக கொண்டு வந்த யானை, தேர்பவனி முடிந்து, ஓய்வெடுக்க  கோவிலுக்கு அருகில், கட்டி வைக்கப்பட்டிருந்த நிலையில் உணவு கொடுக்க முயன்ற இளைஞனை தாக்கியுள்ளது.   

காயமடைந்த இளைஞன் கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. 

யானை  பாகன் அதிகமாக குடிபோதையில் இருந்ததால்   இளைஞன், யானைக்கு உணவளிக்க முன்வந்தமை பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. 

 ரஞ்சித் ராஜபக்ஷ

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X