2026 ஏப்ரல் 02, வியாழக்கிழமை

கொட்டகலையில் விஷமருந்திய இளைஞனுக்கு தொற்று

R.Maheshwary   / 2021 நவம்பர் 21 , பி.ப. 12:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுதத். எச்.எம்.ஹேவா

கொட்டகலை சுகாதார வைத்திய அதிகார பிரதேசத்துக்குடபட்ட யுனிபீல்ட் தோட்டத்தில் தன்னுயிரை மாய்த்துக்கொண்ட இளைஞனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என, கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.

18 வயதான குறித்த இளைஞன், விஷமருந்திய நிலையில், கொட்டகலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து, பிரதேச பரிசோதனைக்காக சடலம் கிளங்கன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு முன்னெடுக்கப்பட்ட என்டிஜன் பரிசோதனையின் போது, இளைஞனுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த இளைஞனின் குடும்ப உறுப்பினர்கள் ஐவர் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், இளைஞனுடன் நெருங்கிப் பழகியவர்களை சுயதனிமைக்குட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .