2026 ஜனவரி 20, செவ்வாய்க்கிழமை

கொட்டகலையை அடுத்து தலவாக்கலையிலும் வெடித்தது

R.Maheshwary   / 2021 டிசெம்பர் 01 , பி.ப. 12:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன், கேதீஸ்

தலவாக்கலை - மேல் கொத்மலை புதிய வீட்டுத் தொகுதியில் சமையல் எரிவாயு அடுப்பு ஒன்று வெடித்த சம்பவம் பதிவாகியுள்ளது.


இந்த சம்பவம் இன்று (1)  காலை 10 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


தேநீர் தயாரிப்பதற்காக அடுப்பை பற்ற வைத்த பின்பு அதனை நிறுத்தி விட்டு, வெளியில் சென்ற ஒரு நொடியிலேயே, இந்த வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

.சம்பவம் தொடர்பில் தலவாக்கலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X