Editorial / 2022 ஓகஸ்ட் 11 , பி.ப. 03:07 - 0 - {{hitsCtrl.values.hits}}

வீடொன்றுக்குள் மறைத்துவைக்கப்பட்டிருந்த பாதுகாப்பான பறவைகளில் ஒன்றான (plum heeded parakeet ) என்ற வகையைச் சேர்ந்த கிளியொன்றை, வனஜீவராசிகள் திணைக்களத்தின் அதிகாரிகள் மாத்தளை களுதாவளை பிரதேசத்தில் மீட்டெடுத்துள்ளனர்.
கிடைத்த தகவலுக்கு அமைய, கடந்த 9ஆம் திகதியன்று அவ்வீட்டை சுற்றிவளைத்த அதிகாரிகள், கிளியை மறைத்து வைத்திருந்தவரையும் கைது செய்துள்ளனர். அவரை மாத்தளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மாத்தளை மாட்டத்தைப் பொருத்தவரையில் இவ்வாறான கிளியொன்றை முதல் தடவையாக தாங்கள் மீட்டெடுத்துள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்திக அருணகுமார
22 Mar 2026
22 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 Mar 2026
22 Mar 2026