2026 மே 03, ஞாயிற்றுக்கிழமை

கொத்மலை ஓயா ஆற்றில் இயந்திரக் கழிவுகள்

சுஜிதா   / 2020 ஏப்ரல் 16 , மு.ப. 11:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

அக்கரபத்தனையில் இயங்கும் தொழிற்சாலையொன்று, கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர், தொழிற்சாலை இயந்திரக் கழிவுகளை, கொத்மலை ஓயா ஆற்றில் திறந்துவிட்டுள்ளமையால், குறித்த ஆற்றின் நிறம் பச்சை நிறமாக மாறிவிட்டதாக, பிரதேச வாசிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

திஸ்பனை, அக்கரகந்த ஆகிய பிரதேசங்களூடாகச் செல்லும் கொத்மலை ஓயாவின் நீரே இவ்வாறு பச்சை நிறமாக மாறியுள்ளதாக இந்த ஆற்று நீரில், இரசாயனப் பதார்த்தங்கள் கலந்திருக்கக்கூடும் என, தாம் அஞ்சுவதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால், குறித்த ஆற்றைத் தங்களால் பயன்படுத்த முடியாதுள்ளது என்றும் குறத்த ஆற்றிலுள்ள நீர்வாழ் உயிரினங்களும் இதனால் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எனவே, இது குறித்து சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்ம் என, மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .