2026 ஜனவரி 21, புதன்கிழமை

கொரோனா செய்தித் துளிகள்

Kogilavani   / 2021 மே 17 , பி.ப. 01:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

இராகலை பொது சுகாதார பிரிவில், ஞாயிற்றக்கிழமை(16) 12 பேருக்கு, கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இப்பிரதேசத்தில் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 26 ஆக உயர்வடைந்துள்ளது. (ஆர்.ரமேஸ்)

மத்திய மாகாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை, 13,291ஆக அதிகரித்துள்ளது. கண்டி மாவட்டத்தில்​ 7,821 தொற்றாளர்களும் நுவரெலியா மாவட்டத்தில் 2,469 தொற்றாளர்களும், மாத்தளை மாவட்டத்தில் 3,001 தொற்றாளர்களும் இனங்காணப்பட்டுள்ளனர். (மொஹொமட் ஆஸிக், டி.ஷங்கீதன்)

இரத்தினபுரி மாவட்டத்தில், கடந்த 10 தினங்களில் 1312 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை (16) மட்டும் 99 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். (சிவாணிஸ்ரீ, அஜித்லால் சாந்த உதய)

மாத்தளை மாவட்டத்தில், மாத்தளை, தம்புள்ளை, கலேவெல, உக்குவலை, நாவுல ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. (இந்திக அருணகுமார)
 

பதுளையில் மேலுமொருவர் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணமடைந்ததையடுத்து, மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 23ஆக உயர்வடைந்துள்ளது. (எம்.செல்வராஜா)

கொலன்ன பிரதேசத்திலுள்ள தனியார் ஆடைத் தொழிற்சாலையொன்றின்றில் பணியாற்றும் 33 ஊழியர்களுக்கு, கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.(ஏ.ஏ.எம்.பாயிஸ்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X