2025 மே 13, செவ்வாய்க்கிழமை

கொரோனா நெருக்கடியால் வியாபார நடவடிக்கைகள் பாதிப்பு

Gavitha   / 2020 ஒக்டோபர் 12 , பி.ப. 03:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திக அருணகுமார

நாட்டில் தற்போது ஏற்பட்டு கொரோனா வைரஸ் பரவல் நெருக்கடி நிலைமை காரணமாக, மாத்தளை மற்றும் அதனை அண்மித்த நகரங்களில், வியாபார நடவடிக்கைகள் பாதிப்படைந்துள்ளதாக, வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஓட்டோ உள்ளிட்ட வாகனங்களை வாடகைக்கு அமர்த்துவது குறைவடைந்துள்ளதாகவும் கட்டுமானப் பணிகளுக்கான பொருள்களைக் கொள்வனவு செய்வதற்காக வரும் நுகர்வோரின் எண்ணிக்கையும் குறைவடைந்துள்ளதாகவும் அன்றாடம் பொருள் கொள்வனவுக்காக வருபவர்களின் எண்ணிக்கையும் குறைவடைந்துள்ளதாகவும் அவர் மேலும்

இதன் காரணமாக, கண்டி-ஏ 9 வழியை மய்யமாகக் கொண்ட பல தற்காலிக வணிக நிலையங்கள் மூடப்பட்டுள்ளன என்று வர்த்தகர்கள் கூறுகின்றனர்.

கொரோனா வைரஸ் பரவலைத் தவிர்ப்பதற்காக, அவசியத் தேவைகளுக்காக மட்டுமே வாடிக்கையாளர்கள் நகரத்துக்கு வருவதால்,  தினசரி நடவடிக்கைகள் பாதிக்கப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X