Editorial / 2019 செப்டெம்பர் 13 , மு.ப. 11:35 - 0 - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சதீஸ்
நாவலப்பிட்டி பொலிஸ்பிரிவுக்குட்பட்ட கெட்டபுலா, கொலப்பத்தனை தோட்டத் தொழிலாளர்கள், நேற்று (12), ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கொலப்பத்தனை தோட்டத் தலைவரை, குறித்தத் தோட்டத்தின் முகாமையாளர் அடிக்க முயற்பட்டதாகவும், எனவே, தோட்டத் துரையை கைது செய்யுமாறு கோரியுமே, இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
தோட்ட முகாமையாளரின் பங்களாவிலிருந்து, தோட்டத் தலைவர் வசிக்கும் வீட்டுத்திட்டப் பகுதிக்கு, குழாய் மூலம் நீர் வழங்கப்பட்டு வந்த நிலையில், நீர் வரும் குழாயை, தோட்டத் தலைவர் சுத்திகரிப்புக்காக கழற்றியதாகவும் ஆனால், அதைத் தவறுதலாகப் புரிந்துகொண்ட முகாமையாளருக்கும் தோட்டத் தலைவருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டு, பின்னர், முகாமையாளர், தோட்டத் தலைவரை அடிக்க முற்பட்டதாக தெரியவருகின்றது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த நான்கு நாள்களாக, தோட்டத் தொழிலளார்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையிலேயே, நேற்று (12) ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இது தொடர்பாக, தோட்ட முகாமையாளர் சமிந்த பண்டாரவிடம் வினவியபோது,
தான் யாரையும் தாக்கவில்லை என்றும் இது போலியானக் குற்றச்சாட்டு என்றும் தெரிவித்தார்.
தனக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இதற்காக, தான் பொலிஸ் நிலையத்துக்கு செல்லவுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.



2 hours ago
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago
4 hours ago