டி.சந்ரு / 2019 பெப்ரவரி 26 , மு.ப. 11:26 - 0 - {{hitsCtrl.values.hits}}

தலவாக்கலை பெருந்தோட்ட நிறுவனத்தால் நடத்தபட்ட கொழுந்து பறிக்கும் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு, தலவாக்கலையில், அண்மையில் நடைபெற்றது.
கொழுந்து பறிக்கும் போட்டியின் முதற்கட்டப் போட்டியில், 15 போட்டியாளர்கள் பங்குபற்றியுள்ளனர்.
20 நிமிடங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட இப்போட்டியில், முதல் மூன்று இடங்களை, முறையே, புஸ்பலதா, கனேஸ்வரி, திருச்செல்வி ஆகியோர் பெற்றுக்கொண்டுள்ளனர்.
இவர்களில் முதலிடத்துக்குத் தெரிவான புஸ்பலதா என்பவர், இறுதிப் போட்டியில் பங்குபெற தகுதிபெற்றுள்ளார்.
தலவாக்கலை - சமர்செட் தோட்ட முகாமையாளர் எரங்க எக்கரவல தலைமையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், மேற்படி மூன்று போட்டியாளர்களும் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.




5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago