Editorial / 2020 பெப்ரவரி 10 , பி.ப. 06:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெருந்தோட்ட கூட்டுத்தாபனத்துக்குரிய தேயிலைத் தோட்டங்களில் பறிக்கப்படும் கொழுந்துகளை, தனியாருக்கு வழங்குவதை, உடன் அமுலுக்கு வரும் வகையில் தடைசெய்வதற்கு, விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர் ரமேஸ் பத்திரண அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
பெருந்தோட்டக் கூட்டுத்தாபனத்தின் கீழ், 15 தோட்டங்கள் காணப்படுவதுடன், குறித்த 15 தோட்டங்களின் தொழிற்சாலைகள் ஊடாகக் கொழுந்தை உரியமுறையில் அரைக்கும் வாய்ப்புக் காணப்பட்டாலும் குறித்த தோட்டங்களின் கொழுந்துகள், தோட்ட முகாமையாளர்களால் தனியாருக்கு வழங்கப்படுவதாக அதிகாரியொருவர் தெரிவித்தார்.
இவ்வாறு தனியாருக்கு வழங்கிய தேயிலைக்காக, 5 மில்லியன் ரூபாய் இதுவரை பெருந்தோட்டக் கூட்டுதாபனத்துக்குக் கிடைக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே தேயிலை விளைச்சல் அதிகமாகக் காணப்படும் காலங்களில், விலைமனுக் கோரல் மூலம் தெரிவு செய்யப்படும் தனியாருக்கு மாத்திரம், கொழுந்தை வழங்க அமைச்சர் உத்தரவிட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
19 minute ago
4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
4 hours ago
4 hours ago
5 hours ago