Editorial / 2018 ஒக்டோபர் 23 , பி.ப. 10:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாலித ஆரியவன்ச
பாரிய மண்சரிவு இடம்பெற்ற கொஸ்லாந்தையில், மீண்டும் இன்று (23) மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
ஏற்கெனவே மண்சரிவு ஏற்பட்ட பகுதியின் கீழ்ப் பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதென, அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பதுளை மாவட்டப் பணிப்பாளர் ஈ.எல்.எம்.உதயகுமார தெரிவித்தார்.
மேற்படி பகுதியில் நேற்று மாலை, 10 ஏக்கரிலான நிலப்பரப்பு, மண்சரிவு அனர்த்தத்துக்கு உள்ளாகியுள்ளது.
மண்சரிவு ஏற்பட்ட கீழ்ப் பகுதியில், சுமார் 12 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன என்றும், இவர்களுக்கு முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதெனவும் தெரிவித்த அவர், மேற்படி பகுதியில் தேசிய கட்டட ஆராய்ச்சி நிலையத்தின் அதிகாரிகள் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர் என்றும் தெரிவித்தார்.
53 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
1 hours ago
1 hours ago