Editorial / 2019 செப்டெம்பர் 08 , பி.ப. 05:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
றம்ஸி குத்தூஸ்
கண்டி மாநகர சபைக்குச் சொந்தமான கொஹாகொடயிலுள்ள காணியில், குப்பைகளைக் கொட்டுவதற்கு, பல தரப்பிலிருந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டாலும் அப்பகுதியில் மீள் சுழற்சி முறையில், சூழலுக்கு எந்தவொரு பாதிப்பும் இல்லாத வகையிலேயே குப்பைகள் கொட்டும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, கண்டி மாநகரசபை பிரதி மேயர் இலாஹி ஆப்தீன் தெரிவித்தார்.
குப்பைக் கொட்டும் பிரச்சினை தொடர்பாக, தமிழ்மிரருக்கு இன்று (08) கருத்துத் தெரிவித்த அவர்,
கண்டி மாநகர சபைக்குச் சொந்தமான சுமார் 30 ஏக்கர்காணியிலேயே இந்தக் குப்பைகள் கொட்டப்படுவதாகவும் எனினும், இதனால், சுகாதார சீர்கேடுகள் எதுவும் ஏற்படுவதில்லை என்றும் கூறினார்.
ஆனால், இதற்கு எதிராக சிலர் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர் என்றும் அவர் கூறினார்.
கொஹாகொடயில் கொட்டப்படும் குப்பை, கொழும்பிலுள்ள மீத்தோட்டமுல்ல குப்பைமேடுமல்ல என்றும் இங்கு கொட்டப்படும் குப்பைக் கழிவிலிருந்துவரும் பிளாஸ்திக் பொருள்களை, மீள் சுழற்சி செய்து வருவதாகவும் அவர் கூறினார்.
5 hours ago
7 hours ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
8 hours ago
9 hours ago