2025 மே 09, வெள்ளிக்கிழமை

கோடரியால் தாக்கி ஒருவர் கொலை

Janu   / 2025 மே 01 , மு.ப. 11:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொனராகலை, லுணுகம்வெஹெர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கர கால்கொட பகுதியில்  ஒருவரை கோடரியால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் புதன்கிழமை (30) இடம்பெற்றுள்ளதாக லுணுகம்வெஹெர பொலிஸார் தெரிவித்தனர்.

லுணுகம்வெஹெர , சாம வீதியை சேர்ந்த 67 வயதுடைய  ஜி. லெஸ்லி டி சில்வா  என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

அவர் தனது மோட்டார் சைக்கிளில் பயணித்து கொண்டிருந்த போது, ​​பின்னால் வந்த கெப் வாகனம்  மோட்டார் சைக்கிளின் மீது மோதியுள்ளதுடன் கெப் வாகனத்தை செலுத்தி வந்தவர், கீழே விழுந்து கிடந்த  மோட்டார் சைக்கிள் ஓட்டுநரின் வலது மற்றும் இடது தோள்களில் கோடரியால் தாக்கியுள்ளார்.

தனது வாகனத்தை முந்திச் செல்ல அனுமதிக்கவில்லை என்று கூறி, அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. .

இதில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்  லுணுகம்வெஹெர பிரதேச வைத்தியசாலையில் அனுமதித்த போதும் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

அதே பகுதியை சேர்ந்த சந்தேக நபர்  அவரது வாகனத்துடன் கைது செய்யப்பட்டுள்ளதுடன்  சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை லுணுகம்வெஹெர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 சுமனசிறி குணதிலக


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X