Editorial / 2019 மார்ச் 18 , மு.ப. 01:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ், கு.புஷ்பராஜ், டி.சந்ரு. சுஜிதா, கௌசல்யா
நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெல்ஸி தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் கதைவ உடைத்து, திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்ட சந்தேகநபரை மடக்கிப் பிடித்துள்ள பிரதேச மக்கள், அவரை நையப்புடைத்து, பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
நேற்று முன்தினம் (16) கைது செய்யப்பட்ட இந்நபரிடமிருந்து, அம்மன் சிலைக்குப் போடப்பட்டிருந்த தாலியும் விலையுயர்ந்த கோவிலின் பல பொருள்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இந்தத் திருட்டுச் சம்பவத்தில், ஐவர் ஈடுபட்டிருந்தனர் என்றும் ஒருவர் மாத்திரமே மடக்கிப்பிடிக்கப்பட்டுள்ளார் என்றும் தப்பிச் சென்ற மற்றைய நால்வரையும் தேடி, பொலிஸார் வலைவிரித்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
நையப்புடைக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நபர், தற்போது நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் எனத் தெரியவருகின்றது.
16 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
1 hours ago
2 hours ago