Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 14, திங்கட்கிழமை
Kogilavani / 2017 செப்டெம்பர் 17 , பி.ப. 05:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
மு.இராமச்சந்திரன்
மத்திய மாகாணசபை உறுப்பினர்களுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதியில், கலை, கலாசார நடவடிக்கைகளுக்கு இரண்டரை இலட்சம் ரூபாய் நிதியே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால், கோவில் நிர்மாணப் பணிகளுக்கென, பெருந்தொகையான நிதியை வழங்க முடியாதுள்ளதென, மத்திய மாகாணசபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன் தெரிவித்தார்.
தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து டிக்கோயா வனராஜா மேற்பிரிவு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய நிர்மாணத்துக்கென 25,000 ரூபாய் பெறுமதியான சீமெந்து பொதிகளை வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு கூறினார்.
தொழிலாளர் தேசிய சங்கத்தின் டிக்கோயா அமைப்பாளர் உ.சுப்ரமணியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், மத்திய மாகாணசபை உறுப்பினர் சிங்.பொன்னையா, தொழிலாளர் தேசிய சங்கத்தின் பொதுச்செயலாளர் எஸ்.பிலிப் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் மேலும் கூறுகையில்,
“பெரும்பாலான தோட்டங்களில், ஆலய நிர்மாணப் பணிகளுக்கு மக்கள் முன்னுரிமை வழங்கி வருகின்றனர். இந்த நிர்மாணப்பணிகளுக்கு மக்கள் பிரதிநிதிகளிடமிருந்து பெருந்தொகையான நிதியை எதிர்பார்க்கின்றனர்.
“எனினும், எமக்கு அதிகமான நிதியை வழங்க முடியாது. மக்களின் உட்கட்டமைப்பு வசதிகள், சமூக நலனுக்கான வசதிகள், சுயதொழில், விவசாயம் போன்றனவற்றுக்கே குறிப்பிட்டளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
“எனவே, எமக்கென வருடந்தோறும் ஒதுக்கப்படுகின்ற 25 இலட்சம் ரூபாய் நிதியைக் கொண்டே, மக்களின் தேவைகளை நிறைவேற்ற வேண்டியுள்ளது. இதனை, மக்கள் உணர்ந்து கொள்ளவேண்டும். எனவே, கோவில் நிர்மாணப் பணிகளுக்கு, அடியார்களின் ஒத்துழைப்பும் மிக முக்கியமானதாகும்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
3 hours ago
3 hours ago