2026 ஏப்ரல் 09, வியாழக்கிழமை

சூரியகந்தை தோட்டத்தில் 96 பேர் வெளியேற்றம்

Kogilavani   / 2016 மே 15 , மு.ப. 10:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன்,ரஞ்சித்ராஜபக்ஷ

மஸ்கெலியா, பிரவுன்வீக் சூரியகந்தை தோட்டத்தில் மண்சரிவு காரணமாக 18 குடும்பத்தைச் சேர்ந்த 96 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதுடன் பாதுகாப்பு பணியில் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சூரியகந்தை தோட்ட ஆறாம் இலக்க லயன் குடியிருப்பின் பின்புறத்தில் சனிக்கிழமை(15)  இரவு மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக இக்குடியிருப்பில் வசித்து வந்த 96 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதுடன் இவர்கள்  தோட்ட சிறுவர் நிலையம், சிறுவர் முன்பள்ளி ஆகிய நிலையங்களில் தற்காலிகமாக  தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

தொடரும் மழை காரணமாக இப்பகுதியில் பாரிய அனர்த்தம் ஏற்படலாம் என்ற அச்சம் காரணமாக  இராணுவத்தினர் குறித்த பகுதியில் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் ஹட்டன்- கினிகத்தேனை பகுதிகளிலும்  மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளதுடன் அனர்த்தம் தொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடன் இருக்குமாறு  நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கோரியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .